தமிழகத்தின் மதுரையில் நடந்த பயங்கர தீ விபத்து சம்பவம் வருத்தம் அளிக்கிறது – அமைச்சர் அமித்ஷா
உத்திரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் இருந்து தென்னிந்தியாவில் சாமி தரிசனம் செய்வதற்காக 60-க்கும் மேற்பட்டோர் ஒரு பெட்டியில் பயணித்துள்ளனர். இவர்கள் கடந்த 17-ஆம் தேதி யாத்திரையாக தமிழகம் வந்துள்ளனர். நேற்று நாகர்கோவிலை பத்மநாதர் கோவிலில் சாமி தரிசனம் மேற்கொண்டு மதுரையை வந்தடைந்துள்ளார்.
இந்த நிலையில், இந்த ரயில் பெட்டியானது மீண்டும் சுற்றுலா செல்வதற்காக வேறொரு ரயிலில் இணைக்கப்படுவதற்காக மதுரை ரயில் நிலையத்தில் இருந்து 1 கி.மீ தூரத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இவர்கள் ராமேஸ்வரம் செல்லவிருந்ததாக கூறப்படுகிறது.
மதுரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுற்றுலா விரைவு ரயிலில் தேநீர் தயார் செய்வதற்காக சிலிண்டர் பயன்படுத்தப்பட்டுள்ளது. அப்போது திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில், இதுவரை 5 ஆண்கள் 3 பெண்கள் அடையாளம் தெரியாத ஒருவர் என 9 பேர் உயிரிழந்துள்ளனர். 6 காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழகத்தின் மதுரையில் நடந்த பயங்கர தீ விபத்து சம்பவம் வருத்தம் அளிக்கிறது. உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனைகள் என பதிவிட்டுள்ளார்.
Saddened by the tragic fire accident on a train in Madurai, Tamil Nadu. My deepest condolences to the families of those who lost their loved ones. Prayers for the speedy recovery of the injured.
தமிழகத்தின் மதுரையில் நடந்த பயங்கர ரயில் தீ விபத்து வருத்தம் அளிக்கிறது. தங்களின்…
— Amit Shah (@AmitShah) August 26, 2023