மும்பையில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மேற்கு கோரேகானில் உள்ள மகாத்மா காந்தி சாலையில் உள்ள ஏழு மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள HBT ட்ராமா மருத்துவமனையிலும், கூப்பர் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இன்று அதிகாலை 3:50 மணியளவில் பல மாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. மாடி கட்டிடத்தில் இருந்தவர்கள் தீ வேகமாக பரவியதால் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் தவித்தனர். இதற்கிடையில் தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் 8 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 5 தண்ணீர் டேங்கர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, காலை 6 மணியளவில் தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்ததாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர். தீ எப்படி ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…