பீகார் மாநிலதின் உள்ள ராம்தயாலு ரயில் நிலையம் அருகே உள்ள குடிசைப் பகுதியில் நேற்று இரவு 12 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பெண்கள் பரிதாபமாக தீயில் கருகி உயிரிழந்தனர்.
இத்தீ விபத்தில் இறந்த நான்கு பெண்களும் 3 முதல் 12 வயதுக்குட்பட்டவர்கள் என்றும், நரேஷ் ராம் என்ற நபரின் மகள்கள் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும், இந்த தீ விபத்தில் மேலும் 7 பேர் தீக்காயங்களுக்கு உள்ளாகி, மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு அவர்களின் நிலை மோசமாக இருப்பதாக கூறப்படுகிறது.
தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து , உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் சிறிது நேரத்திற்குப் பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
திடீரென எப்படி தீ விபத்து ஏற்பட்டது என்பதற்கான சரியான காரணத்தை இதுவரை வெளியாகவில்லை. இந்த சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: தமிழ்நாட்டில் 2 மாவட்டங்களுக்கு மட்டும் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி கடலூர்…
சென்னை: கிழக்கு இலங்கைக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி: 2025 ஐபிஎல் தொடர், மார்ச் 23ம் தேதி தொடங்கும் என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.…
துபாய்: சில நாட்களுக்கு முன்பு, அஜித் கார் விபத்தில் சிக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. தற்போது, இணையதளம் முழுவதும்…
ஈரோடு: காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு…
துபாய்: நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டவர். தற்போது துபாயில் நடைபெறும்…