ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து..! வெளியாகிய விடியோவால் பரபரப்பு..!
மகாராஷ்டிராவில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தில் உள்ள எம்ஐடிசி (மகாராஷ்டிரா தொழில் வளர்ச்சிக் கழகம்) ரசாயன தொழிற்சாலையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தின் வீடியோக்கள் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எம்ஐடிசியில் பெயிண்ட் தயாரிக்கும் நிறுவனம் மல்லக் சிறப்பு தொழிற்சாலையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தால் தொழிற்சாலையில் உட்பகுதியில் இருந்து பயங்கர வெடிப்புகளும் ஏற்படுகிறது.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் தொழிற்சாலையில் பணிபுரியும் இரண்டு தொழிலாளர்கள் காயமடைந்து உள்ளனர். இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து கண்டறியப்படவில்லை. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து இரண்டு தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்து வருகின்றனர்.
மேலும் இந்த தீ விபத்தால் தொழிற்சாலை முழுவதும் புகை மண்டலமாக மாறியதால் தீயை அணைப்பதற்கு அவர்களுக்கு மிகவும் கடினமாக உள்ளது. சாயமிடுவதற்காக பயன்படுத்தப்படும் ரசாயனங்களை இந்நிறுவனம் சேமித்து வைத்திருந்துள்ளது. அது வெடித்ததால் தீ பரவியதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
महाड MIDC मध्ये मल्लक स्पेशालीटी कंपनीमध्ये आग#maharashtratoday #raigad pic.twitter.com/DQujoMaYmv
— Maharashtra Today (@mtnews_official) February 8, 2023