டெல்லியில் 4 மாடி கட்டத்தில் பயங்கர தீ விபத்து…! 27 பேர் பலி..!
தலைநகர் டெல்லியின் மேற்குப் பகுதியில் உள்ள முண்ட்கா ரயில் நிலையம் அருகில் உள்ள 4 மாடி கொண்ட அலுவலக கட்டிடத்தில் நேற்று மாலை திடீரென்று தீ விபத்து.
தலைநகர் டெல்லியின் மேற்குப் பகுதியில் உள்ள முண்ட்கா ரயில் நிலையம் அருகில் உள்ள 4 மாடி கொண்ட அலுவலக கட்டிடத்தில் நேற்று மாலை திடீரென்று தீப்பிடித்தது. இதனையடுத்து 30 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டன.
இந்த தீ விபத்தில் சிக்கிக் கொண்ட 60 முதல் 70 பேர் மீட்கப்பட்ட நிலையில், 27 பேர் உயிரிழந்துள்ளனர். 40க்கும் மேற்பட்டோர் இந்த விபத்தில் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
முதல் மாடியில் பற்றிய தீ மளமளவென அடுத்த மாடிகளுக்கு பரவியது. தற்போது 27 பேர் உயிரிழந்த நிலையில் இன்னும் உயிரிழப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக கம்பெனி உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.