உத்தரப்பிரதேச மாநிலத்தில் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 8 தொழிலாளர்கள் உயிரிழப்பு.
உத்தரப் பிரதேச மாநிலம் ஹபூர் மாவட்டத்தில் உள்ள மின்னணு பொருட்கள் (எலக்ட்ரானிக்) உற்பத்தி செய்யும் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 8 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் ஏற்பட்ட தீயில் படுகாயமடைந்த மேலும் 15 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் கூறப்படுகிறது.
வெடி விபத்தை அடுத்து தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ரசாயன தொழிற்சாலையில் உள்ள பாய்லர் வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றும் இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அம்மாவட்ட ஐஜி பிரவீன் குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை : மணிப்பூரில் ஏற்பட்ட கலவரத்தில் பலி எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே 5…
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், காலை 10 மணி வரை டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும்…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலிய மண்ணில் 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதுதான் உலகமே எதிர்பார்த்துக்…
சென்னை : நேற்றைய நாள் காவிரி சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்தியதற்கு விவசாய சங்கங்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்ற…
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…