பயங்கர விபத்து…நேருக்கு நேர் மோதிய ரயில்கள்…2 பேர் படுகாயம்.!!
சரக்கு ரயில் மோதியதில் டிரைவர் காயமடைந்துள்ளதாகவும், 2 தொழிலாளர்கள் சிக்கியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் சிங்பூர் ரயில் நிலையம் அருகே இரண்டு சரக்கு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இரண்டு ரயில்களும் நேருக்கு நேரு மோதியதால் ரயில் இன்ஜின்கள் தீப்பிடித்து எரிந்துள்ளது.
இந்த விபத்தில் ஓட்டுநர்கள் காயமடைந்துள்ளனர் எனவும், மேலும் இரண்டு ரயில்வே ஊழியர்கள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. ரயில்கள் மோதி கவிழ்ந்ததில் ரயில் பெட்டிகளிடையே அந்த 2 ரயில்வே பணியாளர்கள் சிக்கியுள்ளதாக அஞ்சப்படுகிறது.
ரயில் விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் ரயில்வே உயர் அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சிக்கியுள்ள 2 பணியாளர்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும், இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.