கர்நாடகாவில் லாரியின் முன்பகுதியில் கார் மோதியதில் 2 குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.
கர்நாடகாவின் குஷ்டகியில் லாரியின் முன்பகுதியில் கார் அதிவேகமாக மோதியதில் 2 குழந்தைகள் உட்பட 6 பேர் சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் இறந்த அனைவரும் விஜயபுரத்தை சேர்ந்தவர்கள் எனவும் அவர்கள் ராகவேந்திர காம்ப்ளே (28), ஜெயஸ்ரீ காம்ப்ளே (25), கஜப்பா பனாசோட் (36) அக்ஷய் சிவசரண் (22), ராக்கி (4) மற்றும் ராஷ்மிகா (2), ஆகியோர் என தெரியவந்துள்ளது.
இந்த விபத்து பற்றி காவல்துறையினர் கூறியதாவது வேகமாக வந்த கார் டயர் வெடித்ததைத் தொடர்ந்து டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி குஜராத் நோக்கிச் சென்ற லாரி மீது மோதியிருக்கலாம். இதன் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டது” என கூறியுள்ளனர்.
மேலும், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் சித்தராமையா, இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் நிவாரணத் தொகையாக அறிவித்துள்ளார்.
சென்னை: துபாயில் நடைபெற்ற சர்வதேச அளவிலான 24H சீரிஸ் கார் ரேஸின் 991 பிரிவில் மூன்றாவது இடம்பிடித்து அசத்தியுள்ளது அஜித்குமார்…
சென்னை: தமிழ்நாட்டில் 2 மாவட்டங்களுக்கு மட்டும் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி கடலூர்…
சென்னை: கிழக்கு இலங்கைக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி: 2025 ஐபிஎல் தொடர், மார்ச் 23ம் தேதி தொடங்கும் என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.…
துபாய்: சில நாட்களுக்கு முன்பு, அஜித் கார் விபத்தில் சிக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. தற்போது, இணையதளம் முழுவதும்…
ஈரோடு: காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு…