புதிய வேலை வாய்ப்புகள், பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு உள்ளிட்டவை நிறுத்திவைப்பு -இன்போசிஸ்
இன்போசிஸ் நிறுவனம் அனைத்து புதிய வேலை வாய்ப்புகள், பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வுகளை நிறுத்தி வைத்துள்ளது.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.இதன் விளைவாக உலக நாடுகள் அனைத்தும் பொருளாதார சரிவை சந்தித்து வருகிறது.இதில் இந்தியா மட்டும் விதிவிலக்கல்ல.இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு காரணமாக தொழில்துறை முடங்கியுள்ளதால் அந்த தொழிற்சாலைகள் கடும் பொருளாதார சரிவை சந்தித்து வருகிறது.
இந்நிலையில் இன்போசிஸ் நிறுவன தலைமை நிர்வாகி நிலஞ்சன் ராய் கூறுகையில்,தற்போதைய சூழலில் புதிதாக பணியாளர்களை சேர்க்க முடியாது.ஊழியர்களின் பணி நீக்கம் செய்யப்போவதில்லை.மேலும் பணியாளர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் காரணமாக பணியாளர்களை பணிக்கு அழைக்க விருப்பமில்லை என்றும் தெரிவித்துள்ளார்.