#BREAKING: லடாக் எல்லையில் மீண்டும் பதற்றம் – ராஜ்நாத் சிங் ஆலோசனை.!

லடாக் எல்லையில் மீண்டும் பதற்றம் நிலவுவதால் அமைச்சர் ராஜ்நாத் சிங் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை.
இந்திய எல்லையான லடாக்கில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இதில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் நோவல், முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். இதனிடையே, லடாக் எல்லையில் சீன ராணுவத்தின் அத்துமீறலை இந்திய ராணுவ படைகள் முறியடித்த நிலையில், மீண்டும் பதற்றம் நிலவுவதால் ஆலோசனை நடைபெற்று வருகிறது.