லடாக்கில் பதற்றம்: ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான 6ம் கட்ட பேச்சுவார்த்தை.!
லடாக் எல்லையில் பதற்றத்தைத் தணிக்க இந்தியா-சீனாவின் ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான 6ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
கிழக்கு லடாக்கில் பதற்றத்தைத் தணிப்பதற்கான வழிகளை ஆராய இருநாட்டு ராணுவ கமாண்டர் 6ம் கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன. இது சுஷில்-மோல்டோ சந்திப்பு பகுதியில் நடைபெற்று வருகிறது. இதில், இந்திய தரப்பில் லெப்டினண்ட் ஜெனரல் ஹரிந்தர் சிங் பங்கேற்றுள்ள நிலையில், முதல்முறையாக மத்திய அரசு தரப்பில் வெளியுறவுத்துறை இணை செயலாளர் நவீன் ஸ்ரீவஸ்தவா பங்கேற்று உள்ளார். இந்த பேச்சுவார்த்தையில் எல்லையில் அமைதியை மீட்பது, அனைத்து துருப்புகளை பின்வாங்குவது குறித்து ஆலோசிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
இதனிடையே கடந்த சில மாதங்களாக லடாக் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்தியும், தொடர்ந்து சீன துருப்புகள் அதிகறிக்கொண்டே இருக்கிறது. இதனால் பாங்காங் ஏரிக்கு அருகிலுள்ள 20க்கும் மேற்பட்ட மலை உயரங்களில் இந்தியா தனது ஆதிக்கத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது. சீன ராணுவம் நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு, துப்பாக்கிச் சூடு நடத்திய மூன்று சம்பவங்கள் உட்பட, போர் தயார் நிலையை ஒட்டுமொத்தமாக உயர்த்துவதன் ஒரு பகுதியாக, லடாக்கில் புதிதாக இணைக்கப்பட்ட ரபேல் போர் விமானங்களை பயன்படுத்த ஐ.ஏ.எஃப் தயாராக உள்ளது என்றும் அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன.