கேரளாவில் பதற்றம் …!144 தடை உத்தரவு பிறப்பிப்பு….!அக்டோபர் 22-ம் தேதி வரை 144 தடை அமலில் இருக்கும்…!
கேரள மாநிலம் பத்தினம் திட்டா, நிலக்கல் உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கேரளா மாநில சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குப் பெண்களும் சென்று வழிபடலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை செயல்படுத்துவதற்கு இந்து அமைப்புகளும், ஐயப்ப பக்தர்கள் சங்கமும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. தமிழகம், கேரளத்தில் பல்வேறு பகுதிகளில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருகின்றன.
சபரிமலை கோயிலில் பெண்களுக்கு அனுமதி என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக கேரளாவில் மீண்டும் போராட்டங்கள் நடைபெறுவதால் அங்கு தொடர்ந்து பதற்றம் ஏற்பட்டுவருகிறது.இந்நிலையில் இன்று கோயில் நடைதிறக்கும் நிலையில்,கேரளாவின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்புக்காக போலீஸார் குவிக்கப்பட்டனர்.அதேபோல் ஏராளமானபெண் போலீஸாரும் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டனர்.
ஆனால் கேரளாவில் சபரிமலை கோவிலுக்குள் நுழைய முயன்ற பெண்களையும் வர விடாமல் போராட்டகாரர்கள் தடுத்தார்கள்.
அது மட்டும் அல்லாமல் சபரிமலையில் அருகே செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளரின் காரை மறித்து போராட்டக்காரர்கள் வன்முறை தாக்குதல் நடத்தினார்கள்.
சபரிமலை கோயிலில் பெண்களுக்கு அனுமதிபதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட திருவாங்கூர் தேவஸ்தான முன்னாள் தலைவர் கோபாலகிருஷ்ணன் உட்பட 20 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதன் பின் நிலக்கலில் போராட்டம் நடத்திவரும் போராட்டக்கார்கள் மீது போலீசார் தடியடி நடத்தினார்கள்.தடியடி நடத்திய போலீசார் மீது போராட்டக்கார்கள் கல்வீசித் தாக்குதல் நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டது.இதனால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் பதற்றம் காரணமாக கேரள மாநிலம் பத்தினம் திட்டா மாவட்டத்தில் உள்ள நிலக்கல்,பம்பை,சன்னிதானம் உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் நூகு கூறுகையில், 144 தடை உத்தரவு ஐயப்ப பக்தர்களுக்கு பொருந்தாது. சபரிமலைக்கு வரும் ஒவ்வொரு பக்தர்களையும் பாதுகாப்பதே அரசின் நோக்கம் ஆகும்.சன்னிதானம் சுற்றுவட்டாரத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது .நாளை காலை முதல் அக்டோபர் 22-ம் தேதி வரை 144 தடை அமலில் இருக்கும் என்று பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் நூகு தெரிவித்துள்ளார்.