எல்லையில் பதற்றம்! இந்திய, சீன ராணுவ வீரர்கள் மோதல்.!

Default Image

அருணாச்சல பிரதேசத்தில் எல்லை அருகே இந்திய, சீன ராணுவ வீரர்கள்  மோதலில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் பகுதியில் உள்ள எல்ஏசி எனும் உண்மையான கட்டுப்பாட்டுக்கோடு அருகே இந்திய மற்றும் சீன ராணுவ வீரர்கள் நேருக்கு நேர் மோதலில் ஈடுபட்டுள்ளனர். இந்த மோதலில் இரு தரப்பிலும் சில வீரர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏறத்தாழ 300 சீன வீரர்கள் இந்திய எல்லையில் நுழைந்ததாகவும், இந்திய ராணுவம் தயாராக இருந்ததால் இந்த தாக்குதலை சமாளிக்க முடிந்ததாகவும் தகவல் தெரிவிக்கின்றன. இந்திய வீரர்களை விட சீன வீரர்களே இந்த மோதலில் அதிக காயமடைந்ததாக கூறப்டுகிறது.

அதன்பிறகு இரு நாட்டு வீரர்களும் உடனடியாக அந்த இடத்தை விட்டு வெளியேறியுள்ளனர். இது குறித்து பேசிய இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நமது ராணுவ வீரர்கள் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த சீன வீரர்களை, தைரியமாக தடுத்து நிறுத்தி அவர்களை பின்வாங்க வைத்துள்ளனர் என்று கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்