அசாமில் ராகுல் யாத்திரை தடுக்கப்பட்டதால் பதற்றம்!

rahul gandhi

காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி முன்னெடுத்த இந்திய ஒற்றுமை  நடைபயணம் யாத்திரை வெற்றியை தொடர்ந்து, தற்போது இரண்டாவது கட்டமாக பாரத் ஜோடோ நியாய யாத்திரை என்ற பெயரில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். தற்போது அசாம் மாநிலத்தில் ராகுல் காந்தி பாரத ஒற்றுமை நியாய யாத்திரை மேற்கொண்டு வருகிறார்.

அசாமில் யாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி இன்று காலை நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 127வது பிறந்தநாளையொட்டி, அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிலையில், அசாம் மாநிலத்தில் கவுகாத்தி நகருக்குள் நுழைய விடாமல் ராகுல் காந்தி தடுக்கப்பட்டதால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

மிசோரமில் ராணுவ விமானம் விழுந்து விபத்து: 6 பேர் காயம்!

அசாமில் யாத்திரை மேற்கொண்ட ராகுலுக்கு அம்மாநில முதல்வர் மூலம் கடுமையான இடையூறுகள் கொடுக்கப்படுவதாக காங்கிரஸ் குற்றச்சாட்டை முன்வைத்திருந்த நிலையில், தற்போது கவுகாத்தி நகருக்குள் நுழைய விடாமல் ராகுல் காந்தி தடுக்கப்பட்டதால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனால் கவுகாத்தி எல்லையான கானாபுராவில் அசாம் மாநில போலீஸ் நூற்றுக்கணக்கானோர் குவிக்கப்பட்டுள்ளனர்.

நேதாஜியின் 127வது பிறந்தநாள் : நடைப்பயணத்தில் ராகுல்காந்தி மரியாதை.!

இந்த சூழலில் ஆயிரக்கணக்கானோர் தொண்டர்களுடன், ராகுல் காந்தியை குவாஹாத்தி எல்லைக்குள் நுழைய விடாமல் அசாம் போலீஸ் தடுப்பதால், தொண்டர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ராகுல் காந்தியின் பயணத்தை போலீஸ் தடுத்ததால், இரு தரப்புக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு, தடியடி நடத்தப்பட்டுள்ளது. அதுவும், ராகுல் காந்தி கண் முன்னே காங்கிரஸ் தொண்டர்கள் மீது தடியடி நடத்தியதால் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

இதையடுத்து ராகுல் காந்தி கூறியதாவது, கவுகாத்தியில் உள்ள பல்கலைக்கழக மாணவர்களை சந்தித்து தான் பேசக்கூடாது என்பதற்காக தடுக்கப்படுவதாகவும், அமைச்சர் அமித்ஷா உத்தரவின்பேரில் அசாம் முதல்வர் தமது யாத்திரையை தடுப்பதாகவும் குற்றசாட்டியுள்ளார். இதனிடையே, ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய  யாத்திரிகைக்கு அசாம் மாநில காவல்துறை தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்