இந்திய – சீனா இடையே நீடிக்கும் பதற்றம்.! லடாக் எல்லைப்பகுதியில் இருநாட்டு படைகள் குவிப்பு.!

Default Image

லடாக் எல்லைப்பகுதியில் தொடர்ந்து இருநாட்டு படைகள் குவிக்கப்பட்டுள்ளதால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இந்தியா மற்றும் சீனா எல்லைப் பகுதிகள் பெரும்பாலும் மலைப் பகுதியாக உள்ளது. இதனால், எல்லைகளை நிர்ணயிக்க வேலி போன்ற தடுப்புகள் எதும் இல்லையென்றாலும் இருநாட்டு எல்லைகள் தனியாக இருக்கிறது. லைன் ஆப் ஆக்சுவல் கண்ட்ரோல் என்று கூறப்படும், யார் கட்டுப்பாட்டில் எந்த பகுதி உள்ளது என்பது தனியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால், இப்பகுதிகளில் ரோந்து பணி மேற்கொள்ளும்போது, இதுபோன்ற பிரச்சனைகள் நிகழ்கின்றன.  இதனிடையே, கடந்த 2017 ஆம் ஆண்டில் சீனா, இந்தியா ஆகிய நாடுகளின் எல்லையில் உள்ள டோக்லாம் பகுதியில் அத்துமீறி சீன ராணுவம் நுழைந்தாகவும், முகாம்கள் அமைக்க முயற்சி செய்ததாகவும் இந்திய ராணுவம் குற்றசாட்டிருந்தது. 

இதன் காரணமாக, சுமார் 73 நாட்களுக்கு இரு நாட்டிற்கிடையே போர்ப்பதற்றம் நீடித்தது. இதையடுத்து, எல்லையில் அமைதியை பராமரிக்க இரு நாடுகளும் ஒப்புக் கொண்டதைத் தொடா்ந்து, அந்த பிரச்னை முடிவுக்கு வந்தது. இந்த நிலையில், கிழக்கு லடாக் எல்லைக்கோட்டு பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் சீன ராணுவம் அத்துமீறி நுழைந்திருப்பதாகவும், இந்திய கட்டுப்பாட்டுக்குள்ள பகுதியில் 2 முதல் 4 கிலோ மீட்டர் வரை உள்ளே வந்து ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளதாக இந்திய ராணுவம் குற்றம்சாட்டியுள்ளது. இதனை தவிர சாலைகள், கூடாரங்கள் மற்றும் பதுங்கும் குழிகள் போன்றவைககளை அமைக்க சீன ராணுவம் அத்துமீறி ஈடுபடுவதாக கூறப்படுகிறது.

அதே சமயத்தில், அப்பகுதியில் இந்திய ராணுவத்தை சேர்ந்தவர்கள் சில பாலங்கள் அமைக்க ஏற்பாடு செய்தபோது சீன ராணுவம் எதிர்ப்பு தெரிவித்தது. தற்போது, லடாக் எல்லை பகுதியில் 5000 வீரர்களை சீன ராணுவம் குவித்துள்ளது. இதுபோன்ற பிரச்சனைகள் தொடர்ந்து வண்ணம் உள்ளது. ஆகையால், அடுத்தகட்டமாக மூத்த அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை நடக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது. கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற பிரச்சனையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட்டது. அதேபோல இந்த முறையும் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. ஆனால் அதே வேளையில், இந்திய ராணுவம் தமது பாதுகாப்பை விட்டுக் கொடுக்க கூடாது என்பதற்காக அப்பகுதிக்கு கூடுதலாக துருப்புகளை அனுப்பிருக்கிறார்கள். இதைத்தவிர டிரோன் விமானங்கள் மூலம் அந்த பகுதி முழுவதும் இந்திய ராணுவத்தால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதனால் எல்லைப்பகுதியில் பதற்றம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்