Categories: இந்தியா

காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் மீண்டும் செயல்பட தற்காலிக அனுமதி!

Published by
பாலா கலியமூர்த்தி

காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் அனைத்தும் இன்று காலை திடீரென வருமான வரித்துறை அதிகாரிகளால் முடக்கப்பட்டது. வருமான வரித்துறைக்கு செலுத்த வேண்டிய தொகையை செலுத்தாததால், வங்கி கணக்குகள் முடக்கப்பட்டதாக தகவல் வெளியானது. தேர்தல் நெருங்கும் வேளையில், கட்சியின் வங்கி கணக்குகள் வேண்டுமென்றே முடக்கப்பட்டாக காங்கிரஸ் கட்சி பொருளாளர் அஜய் மாக்கன் குற்றசாட்டை முன்வைத்தார்.

இதுபோன்று, வங்கி கணக்குகள் முடக்கப்பட்டதுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்டோர் கண்டனங்களை தெரிவித்தனர். அதில், மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது, நாட்டின் மிகப்பெரிய எதிர்க்கட்சியான காங்கிரஸின் கணக்குகளை அதிகாரப் போக்கில் மோடி அரசு முடக்கியுள்ளது.

ரூ.3.71 லட்சம் கோடி பட்ஜெட்டை அறிவித்த முதல்வர் சித்தராமையா..!

மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், இதுபோன்ற செயல் இந்திய ஜனநாயகத்தின் மீதான ஆழமான தாக்குதல். இந்த எதேச்சதிகாரத்திற்கு எதிராக நாம் வீதியில் இறங்கி கடுமையாகப் போராடுவோம் என கூறியிருந்தார். இதுபோன்று, ராகுல் காந்தி கூறியதாவது, காங்கிரேஸை பார்த்து பிரதமர் மோடி பயப்பட வேண்டாம், நாங்கள் பண வலிமைமிக்க கட்சி அல்ல, மக்கள் வலிமைமிக்க கட்சி.

எதற்கும் நாங்கள் அடிபணியமாட்டோம். ஜனநாயகத்தை காக்க எங்கள் தொண்டர்களுடன் தொடர்ந்து போராடுவோம் என்றார். அதேபோல், காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதற்கும், பாஜக அரசுக்கு எதிராகவும் இந்திய இளைஞர் காங்கிரஸ் டெல்லியில் உள்ள ஐஒய்சி அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர்.

இதனிடையே, வங்கி கணக்குகள் முடக்கத்துக்கு எதிராக வருமான வரி மேல்முறையீடு தீர்ப்பாயத்தில் காங்கிரஸ் கட்சி முறையீடு செய்திருந்தது. இதன்பின், காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் மீண்டும் செயல்பட தற்காலிக அனுமதியை வழங்கியது வருமான வரித்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயம். அதன்படி, தீர்ப்பாயம் உத்தரவை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் ஒரு மணிநேரத்துக்கு பிறகு மீண்டும் செயல்பட தொடங்கின.

Recent Posts

தலைமறைவாக இருந்த நடிகை கஸ்தூரி ஹைதராபாத்தில் அதிரடி கைது..!

ஹைதராபாத் : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த நடிகை கஸ்தூரி தற்போது ஹைதராபாத்தில்…

6 hours ago

ஹாக்கி மகளிர் ஆசியகோப்பை : சீனாவை வீழ்த்தி அரை இறுதியை உறுதி செய்த இந்தியா!

பீகார் : ஹாக்கியில் மகளிருக்கான 8-வது ஆசிய கோப்பைத் தொடரானது தற்போது பீகாரில் உள்ள ராஜ்கிரில் நடைபெற்று வருகிறது. இந்த…

6 hours ago

டிரம்பின் தலைமையில், போரானது விரைவில் முடிவுக்கு வரும்! உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேச்சு!

மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது…

7 hours ago

நீங்க அப்பா..அண்ணானால வந்தீங்க ஆனால் நான்…? சினிமா பின்புலத்தை வைத்து தாக்கிய நயன்தாரா!

சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…

8 hours ago

“எதாவது ஒரு தொடரில் வாய்ப்பு கிடைக்கும்” …நம்பிக்கையுடன் காத்திருக்கும் ஷர்துல் தாகூர்!

மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…

9 hours ago

தமிழகத்தில் 7 மணி வரை பரவலான மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்!!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…

10 hours ago