தற்காலிக ஓய்வூதியம் 1 ஆண்டு காலம் வரை நீட்டிப்பு..!
தற்காலிக ஓய்வூதியம் வழங்குவதற்கான கால அளவை ஓய்வு பெற்ற நாளிலிருந்து ஒரு வருடம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஒய்வூதிய துறை மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்பு துறையை சேர்ந்த மூத்த அதிகாரிகள் உடனான கூட்டத்தில் காணொளி மூலம் பேசிய மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், கொரோனா நிலைமையைக் கருத்தில் கொண்டு தற்காலிக ஓய்வூதியம் வழங்குவதற்கான கால அளவை ஓய்வு பெற்ற நாளிலிருந்து ஒரு வருடம் வரை நீட்டிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக நேற்று தெரிவித்தார்.
மேலும், தற்காலிக குடும்ப ஓய்வூதியத்திற்கான விதிகள் தளர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, சில சந்தர்ப்பங்களில், அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்ற பின்னர் உயிழந்துள்ளனர் மற்றும் ஓய்வூதியம் தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்க முடியவில்லை என்றால் தகுதிவாய்ந்த குடும்ப உறுப்பினரிடமிருந்து குடும்ப ஓய்வூதியம் மற்றும் இறப்பு சான்றிதழ் கிடைத்தவுடன் உடனடியாக குடும்ப ஓய்வூதியம் அனுமதிக்கப்படலாம் என்று அமைச்சர் சிங் தெரிவித்தார்.