“பெருங்குடல் அலர்ஜி” சிகிச்சைக்காக பொதுவான மருந்திற்கு தற்காலிக ஒப்பந்தம்.!
பெருங்குடல் அலர்ஜி மருந்திற்கு தற்காலிக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என்று ஜைடஸ் காடிலா மருந்து நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க சந்தையில் பெருங்குடல் அலர்ஜிக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் மாத்திரைகளை விற்பனை செய்ய அமெரிக்க சுகாதார மையத்திடம் இருந்து தற்காலிக ஒப்புதல் கிடைத்துள்ளதாக மருந்து நிறுவனமான ‘ஜைடஸ் காடிலா’ இன்று தெரிவித்தார்.
ஃபைசரின் ஜெல்ஜான்ஸ் எக்ஸ்ஆர் மாத்திரைகளின் பொதுவான தயாரிப்புக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடம் (USFDA) இருந்து தற்காலிக ஒப்புதல் பெற்றுள்ளது என்று ஜைடஸ் காடிலா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும், மிதமான முதல் கடுமையான பெருங்குடல் அலர்ஜி கொண்ட நோயாளிகளுக்கு சிகிச்சைக்கு இந்த மருந்து பரிந்துரைக்கப்படுகிறது. இந்நிலையில், அகமதாபாத்தில் உள்ள ‘SEZ’ யின் உற்பத்தி நிலையத்தில் இந்த மருந்து தயாரிக்கப்படும் என்று மருந்து நிறுவனம் தெரிவித்துள்ளது.