கண்ணாடி பாட்டில்களில் குடிநீர் விற்பனை செய்ய தற்காலிக தடை.! திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு.!

- கண்ணாடி பாட்டில்களில் குடிநீர் விற்பனை செய்யும் திட்டத்தை திருப்பதி தேவஸ்தானம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருப்பதியில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டதால், தேவஸ்தானம் சார்பில் கண்ணாடி பாட்டில்களில் குடிநீர் விற்பனை செய்ய முடிவெடுக்கப்பட்டது. ஆனால் கண்ணாடி பாட்டில்கள் எளிதில் உடைந்து விடும் அபாயமும், உடைந்த கண்ணாடி துண்டுகள் பக்தர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களின் கால்களில் குத்தி காயம் ஏற்படும் அபாயமும் இருப்பதால், இத்திட்டம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இத்திட்டத்துக்கு பக்தர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பி வருவதால். கண்ணாடி பாட்டில்களில் குடிநீர் விற்பனை செய்யும் திட்டத்தை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்ய போவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதற்காக கண்ணாடி பாட்டில்களில் குடிநீர் விற்பனை செய்யும் திட்டத்தை திருப்பதி தேவஸ்தானம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
டாஸ்மாக் முறைகேடு: “சிறுமீன்கள் முதல் திமிங்கலங்கள் வரை சிக்கும்”- தவெக தலைவர் விஜய் பரபரப்பு அறிக்கை!
March 16, 2025
சுனிதா – வில்மோரை மீட்கும் பணி வெற்றி.! பூமிக்கு திரும்பும்போது என்னென்ன பிரச்சனைகளை எதிர்கொள்வார்கள்?
March 16, 2025