கொரோனாவை மறந்து கொண்டாடப்பட்ட கோயில் திருவிழா – கிராமத்திற்கே சீல் வைத்த கர்நாடக அரசு!
கர்நாடகாவில் உள்ள கதக் மாவட்டத்தில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி கொண்டாடப்பட்ட கோவில் திருவிழாவால் ஒட்டுமொத்த கிராமத்திற்கும் கர்நாடக அரசு சீல் வைத்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கர்நாடக மாநிலத்திலும் கொரோனாவின் தாக்கம் அதிகளவில் காணப்படுவதால் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு விதிகளை மீறி கர்நாடக மாநிலத்திலுள்ள கதக் மாவட்டம் நற்குண்ட் அருகே உள்ள கிராமத்தில் ஆஞ்சநேயர் சிலை நிறுவப்பட்டதை அந்த பகுதி மக்கள் கூட்டம் கூடி விமரிசையாகக் கொண்டாடி உள்ளனர்.
இந்த கொண்டாட்டத்தின் போது இளைஞர்கள் சிறுவர்கள் அனைவரும் கலந்து கொண்டு சமூக இடைவெளி இன்றி, ஊரடங்கை மதிக்காமல் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று கோலாகலமாக விழாவை கொண்டாடி உள்ளனர். கொரோன வாராமல் தடுக்கும் விதமாக அரசு பிறப்பித்த ஊரடங்கை மறந்து திருவிழாவை காரணம் காட்டி மக்கள் வீதிகளில் கூட்டம் கூடியதால், கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இதனை அடுத்து ஒட்டு மொத்த கிராமத்தையும் தனிமை படுத்தும் வகையில் கர்நாடக அரசு சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளது.