Temperature: டெல்லியில் ஐந்து ஆண்டுகளில் இல்லாத குறைந்தபட்ச வெப்பநிலையான 9 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. அதே நேரத்தில், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அதாவது, தமிழ்நாட்டில் இயல்பை விட வெப்பம் அதிகரிக்கும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. இப்போதே மதிய நேரத்தில் வெளியே செல்ல முடியவில்லை, இந்த நிலையில் இன்று மற்றும் நாளை 2 அல்லது 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என கூறியுள்ளது.
அதன்படி, இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, வெளியே செல்லும்பொழுது, தண்ணீர் பாட்டிலை கையோடு எடுத்துச் செல்வது நல்லது தான். இந்த நேரங்களில் அடிக்கடி, இளநீர், மோர் போன்றவற்றை அருந்துவது நல்லது.
தமிழ்நாட்டில் இப்படி வெயில் வாட்டி எடுக்க, டெல்லியில் வெப்ப நிலை தணிந்து வருகிறது. மேற்கு இமயமலைப் பகுதியில் இன்று முதல் (மார்ச் 5 ஆம் தேதி) தொடங்கி மார்ச் 7 வரை பனிப்பொழிவு மற்றும் மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், ஜம்மு-காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம் மற்றும் லடாக் ஆகிய பகுதிகளிலும், டெல்லி, அசாம், மேகாலயா மற்றும் பிற மாநிலங்களில் வெப்பநிலை குறைந்து பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இம்மாதம் 25-ஆம் தேதி தொடங்கும் என்று நாடாளுமன்ற விவாகாரங்கள் துறை அமைச்சர் கிரண்…
அமெரிக்கா : உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு இந்திய நேரப்படி சரியாக மாலை…
மும்பை : டெல்லி அணி நிர்வாகம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக விளையாடி வந்த ரிஷப் பண்டை…
இஞ்சி தேன் சாப்பிடுவதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா ? சென்னை -இஞ்சி தேன் சாப்பிடுவதால் நம் உடலுக்கு ஏற்படும் ஆரோக்கிய…
டெல்லி : வரும் 2036-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த சர்வதேச ஒலிம்பிக்…
சென்னை : இந்திய ராணுவத்தின் ராஜ்புத் ரெஜிமென்ட்டில் அதிகாரியாக இருந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை கதையை மையமாக வைத்து…