எச்சரிக்கை…டெல்லியில் குறைந்து தமிழகத்தை வாட்டும் வெப்பநிலை.!

DHELI - tn weather

Temperature: டெல்லியில் ஐந்து ஆண்டுகளில் இல்லாத குறைந்தபட்ச வெப்பநிலையான 9 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. அதே நேரத்தில், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

READ MORE – உணவு விருந்துக்கு மட்டும் ரூ.200 கோடி செலவு! ஆனந்த் அம்பானி திருமண கொண்டாட்டத்தின் பிரம்மாண்டம்

அதாவது, தமிழ்நாட்டில் இயல்பை விட வெப்பம் அதிகரிக்கும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. இப்போதே மதிய நேரத்தில் வெளியே செல்ல முடியவில்லை, இந்த நிலையில் இன்று மற்றும் நாளை 2 அல்லது 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என கூறியுள்ளது.

READ MORE – வன்கொடுமை செய்யப்பட்ட ஸ்பானிஷ் பெண்ணுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு.!,

அதன்படி, இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, வெளியே செல்லும்பொழுது, தண்ணீர் பாட்டிலை கையோடு எடுத்துச் செல்வது நல்லது தான். இந்த நேரங்களில் அடிக்கடி, இளநீர், மோர் போன்றவற்றை அருந்துவது நல்லது.

READ MORE – ஸ்பெயின் பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு .! தலைமை செயலர், டிஜிபிக்கு பறந்த உத்தரவு.!

தமிழ்நாட்டில் இப்படி வெயில் வாட்டி எடுக்க, டெல்லியில் வெப்ப நிலை தணிந்து வருகிறது.  மேற்கு இமயமலைப் பகுதியில் இன்று முதல் (மார்ச் 5 ஆம் தேதி) தொடங்கி மார்ச் 7 வரை பனிப்பொழிவு மற்றும் மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், ஜம்மு-காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம் மற்றும் லடாக் ஆகிய பகுதிகளிலும், டெல்லி, அசாம், மேகாலயா மற்றும் பிற மாநிலங்களில் வெப்பநிலை குறைந்து பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்