மத்திய அரசுக்கு எதிராகக் கொண்டுவரும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிக்கப் போவதில்லை!
தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி மத்திய அரசுக்கு எதிராகக் கொண்டுவரும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிக்கப் போவதில்லை என அறிவித்துள்ளது.
மக்களவையில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கு தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியும் ஆதரவு என தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், நம்பிக்கையில்லா தீர்மானம் என்பது ஒரு அரசியல் ஜாலவித்தை என்றும், இதை ஆதரிக்கும் பேச்சுக்கே இடமில்லை என்றும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவரும், அக்கட்சியின் பொதுச்செயலாளருமான கேசவராவ் தெரிவித்துள்ளார்.
நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு 50 சதவீத ஆதரவை பெறமுடியுமா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அதேசமயம், ஆந்திரத்திற்கு சிறப்பு மாநில அந்தஸ்து என்ற கோரிக்கையை ஆதரிப்பதாக கேசவராவ் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.