20 லட்சம் மரங்களை நட்டு பராமரித்து வந்த சாதனை பெண்மணி! பாராட்டி கௌரவித்த யுனெஸ்கோ!
உலக வெப்பமயமாவதை கட்டுப்படுத்த உலகில் உள்ள பல்வேறு நாடுகளும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. நம் நாட்டிலும் வீட்டிற்கொரு மரம் வளர்க்க அரசு அறிவுறுத்தி வருகிறது.
இந்நிலையில் தெலுங்கானாவை சேர்ந்த சில்கம்பள்ளி அனுசயம்மா எனும் பெண்மணி, 22 கிராமங்களில் சுமார் 20 லட்சம் மரக்கன்றுகளை நட்டு அவற்றை பராமரித்தும் வருகிறார். இவர் தெலுங்கானாவில் உள்ள சங்கரெட்டி எனும் மாவட்டத்தில் பாஸ்தாபூர் எனும் கிராமத்தில் இவர் வசித்து வருகிறார்.
இந்த பெண்மணியின் சேவையை பாராட்டி ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் பண்பாடு அமைப்பான யுனெஸ்கோ கெரவித்துள்ளது. இது குறித்து சில்கம்பள்ளி அனுசயம்மா கூறுகையில், ‘ சர்வதேச அளவிலான இந்த பாராட்டு கௌரவத்தை நாங்கள் எதிர்பார்க்கவில்லை, இது மிகவும் மகிழ்ச்சிகரமாக இருக்கிறது என தெரிவித்தார்.