விவசாயிகளின் 24 ஆயிரத்து 738 கோடி விவசாய கடன்கள் ரத்து..பட்ஜெட்டில் வெடித்த அதிரடி பட்டாசு..
ஒரு லட்சம் ரூபாய் வரையிலான விவசாயக் கடன்களை ரத்து செய்வதாக தெலங்கானா அரசு பட்ஜெட்டில் அதிரடியாக அறிவித்துள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் 2 முறையாக சந்திரசேகராவின் இராட்டிர சமிதி கட்சி தலைமையில் ஆட்சி நடந்து வருகிறது.
அம்மாநிலத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.அம்மாநில நிதியமைச்சர் ஹரீஷ் ராவ் தாக்கல் நிலுவை வைத்துள்ள விவசாயிகளுக்கு 4 தவணைகளாக தள்ளுபடி தொகை வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் தாக்கல் செய்தார்.
இந்த திட்டத்தின் கீழ் 25,000 ரூபாய் நிலுவை வைத்துள்ள 5 லட்சத்து 83 ஆயிரம் விவசாயிகளின் கடன் எல்லாம் ஒரே அடியாக முடித்து வைக்கப்படுகிறது என்று கூறிய அவர் இதற்காக மாநில அரசானது ஆயிரத்து 198 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளது என்று தெரிவித்தார்.
இந்த கடன் தள்ளுபடி தொகைகளை அந்தந்த தொகுதி எம்.எல்.ஏ.க்கள் வழியாக விவசாயிகளிடம் நேரடி சென்று காசோலையாக வழங்கப்படும் என்றும் விவசாயிகளின் ஒரு லட்சம் ரூபாய் வரையிலான கடனை தள்ளுபடி செய்ய மாநில அரசுக்கு மொத்தம் 24 ஆயிரத்து 738 கோடி ரூபாய் தேவைப்படும் என்று கூறப்படுகிறது.
அவ்வாறு விவசாயிகளின் 24ஆயிரத்து 738கோடி ரூபாய் கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என்ற அரசின் அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.