தெலுங்கானாவில் நிறைவேறியது தீர்மானம் !மக்களை காப்பது அரசின் கடமை..சந்திரசேகர்ராவ் பேச்சு!

Default Image

அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில், மத ரீதியில் துன்புறுத்தல்களுக்கு ஆளாகி வரும் சிறுபான்மையின மக்களுக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்கும் சட்டமமானது நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.இந்நிலையில் இச்சட்டத்திற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பிய நிலையில் பல்வேறு மாநிலங்களிலும் போராட்டங்கள் நடந்தது.அதே போல் கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகள் இச்சட்டத்துக்கு எதிராக தீர்மானங்களை நிறைவேற்றி வருகிறது.இந்நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தற்போது தெலுங்கானா சட்டசபையில், நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Image result for chandrasekhar rao assembly

அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் இது தொடர்பாக கொண்டு வந்த தீர்மானத்துக்கு உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்ததை அடுத்து பேரவையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.இந்நிலையில் இது குறித்து முதல்வர் சந்திரசேகர ராவ் செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில் தேசிய மக்கள் தொகை பதிவேடு மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு பட்டியல் ஆகியவற்றை நடைமுறைப்படுத்துவதில் பெரும்பாலோர்களின் பெயர்கள் விடுபட வாய்ப்புள்ளது.இதுகவலை அளிக்கிறது. ஆகவே அவற்றை நடைமுறைபடுத்தும் போது, மக்களை காக்க வேண்டியது, இந்த அரசின் கடமை. என்று கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்