ஓமைக்ரானை தொடர்ந்து மிரட்டும் டெல்மைக்ரான்..! எச்சரிக்கை விடுக்கும் மஹாராஷ்டிரா மருத்துவர்..!
ஓமைக்ரான் வைரஸை தொடர்ந்து, டெல்மைக்ரான் என்ற புதிய வகை வைரஸ் பரவி வருகிறது.
முதலில் சீனாவின் யுகான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸானது, தொடர்ந்து அனைத்து நாடுகளிலும் தனது தீவிர தாக்குதலை நடத்தி வந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பதாக டெல்டா வகை வைரஸ் தீவிரமாக பரவி பரவ தொடங்கியது. இந்த வைரஸ் பாதிப்பால் பலர் பாதிக்கப்பட்ட நிலையில், பலர் உயிரிழந்து உள்ளனர்.
இந்நிலையில், ஓமைக்ரான் வைரஸை தொடர்ந்து, டெல்மைக்ரான் என்ற புதிய வகை வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த அனைத்தும் மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மகாராஷ்டிர மாநில கொரோனா சிறப்பு குழுவை சேர்ந்த மருத்துவர் ஷசாங் ஜோஷி டெல்மைக்ரான் வகை கொரோனா வைரஸ் குறித்து கூறுகையில், ‘டெல்மைக்ரான் என்பது டெல்டா மற்றும் ஓமைக்ரான் அமைப்புகளின் கூட்டு சேர்க்கையாகும். இதன் காரணமாக தான் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கொரோனா சுனாமி ஏற்பட்டுள்ளது.
டெல்மைக்ரான் வகை வைரஸானது, ஓமைக்ரான் வைரஸை காட்டிலும் அதிதீவிரமாக பரவக்கூடியது என்றும், ஆனால் குறைந்த அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். டெல்டா மற்றும் ஓமைக்ரானின் கூட்டு சேர்க்கையான டெல்மைக்ரான் இரண்டு வைரஸ்களின் அமைப்பையும் ஒருங்கே பெற்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.