மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான தொலைபேசி உதவி எண்ணை பல்கலைக்கழக மானியகுழு அறிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் இதுவரை கொரோனா வைரஸால், 70,827 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் குறைகளை தெரிவிப்பதற்காக உதவி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை யூஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்துள்ளது.
இந்த யுஜிசி பல்கலைக்கழகங்களுக்கு சுற்றறிக்கை ஒன்றினை அனுப்பியுள்ளது. அந்த சுற்றறிக்கையில், கொரோனா பரவலை தடுப்பதற்காக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான தொலைபேசி உதவி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை யூஜிசி அறிவித்துள்ளது. இவை தவிர யூஜிசியின் இணையபக்கத்திலும் தங்கள் புகார்களை பதிவு செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பல்கலைக்கழக மானியக்குழு, மாணவர்கள், ஆசிரியர்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்காக தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
ஜெய்ப்பூர் : இன்றைய ஐபிஎல் தொடரின் ஆட்டத்தில் சஞ்சு தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல்…
திருவனந்தபுரம் : தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலம் தாழ்த்துகிறார், அரசியலமைப்பு சட்ட…
ஜெய்ப்பூர் : இன்றைய ஐபிஎல் தொடரின் ஆட்டத்தில் சஞ்சு தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல்…
ஜெய்ப்பூர் : இன்று (ஏப்ரல் 13) ஐபிஎல் 2025-ல் 28வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணியும் , ராயல்…
மதுரை : கோவை போலீசார் இன்று ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்ததாக செய்திகள் வெளியாகின. அதில், மதுரையை சேர்ந்த ரவுடி…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி ஆட்சி தான். ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு போன்ற கோரிக்கைகள் தமிழக…