நாட்டிலேயே முதல் முறையாக எஸ்.சி பிரிவுக்குள் உள் ஒதுக்கீடு., தெலுங்கானா அரசு புதிய அறிவிப்பு!

நாட்டிலேயே முதல் மாநிலமாக பட்டியலின் பிரிவுக்குள் உள் ஒதுக்கீட்டை அறிவித்தது தெலுங்கானா மாநில அரசு. இதன்படி பட்டியலின பிரிவுகளுக்குள் 3 பிரிவுகளை குறிப்பிட்டுள்ளது.

Telangana Govt Inner Reservation

ஹைதராபாத் : நேற்று சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் 135வது பிறந்தநாள் நாடுமுழுவதும் அம்பேத்கர் ஜெயந்தியாக கொண்டாடப்பட்டது. நேற்றைய தினத்தில் தெலங்கானாவில் மாநில அரசு ஒரு முக்கிய உள் இடஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்தியது.  பட்டியலின (எஸ்.சி) பிரிவினருக்கு உள்இடஒதுக்கீடு குறித்த அரசாணையின் முதல் பிரதியை தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி பெற்றுக்கொண்டார்.

இதன் மூலம், தெலங்கானா மாநிலமானது பட்டியல் சாதிகளுக்கு உள் இடஒதுக்கீடு திட்டத்தை சட்டப்பூர்வமாக அமல்படுத்திய இந்தியாவின் முதல் மாநிலம் என்ற பெருமையை பெற்றது. இந்த சட்டம் தெலங்கானா பட்டியல் சாதி இடஒதுக்கீடு சட்டம், 2025 என்று அழைக்கப்படுகிறது.

கடந்த 2024 ஆகஸ்ட் மாதம், உச்சநீதிமன்றம், பட்டியல் சாதிகளை உள்ஒதுக்கீடு செய்ய மாநிலங்களுக்கு அதிகாரம் உள்ளதாக தீர்ப்பளித்ததை தொடர்ந்து.தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, தெலங்கானா இதை முதலில் அமல்படுத்தும் என்று அறிவித்தார். அதன் பிறகு, கடந்த 2024 நவம்பரில், ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஷமீம் அக்தர் தலைமையில் ஒரு நீதித்துறை ஆணையம் அமைக்கப்பட்டு, SC பிரிவினரிடையே பின்தங்கிய நிலையை ஆய்வு செய்தது. இந்த ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் சட்டம் உருவாக்கப்பட்டது. அதன் பிறகு மார்ச் 18, 2025 அன்று, தெலங்கானா சட்டப்பேரவையில் இந்த சட்டம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, ஏப்ரல் 8 அன்று ஆளுநரால் ஒப்புதல் பெறப்பட்டது.

நேற்று அமல்படுத்தப்பட்ட பட்டியலின உள்ஒதுக்கீடு அரசாணைப்படி, பட்டியல் சாதி பிரிவில் உள்ள 59 பிரிவுகளை மூன்று குழுக்களாக (Group 1, Group 2, Group 3) பிரித்து, 15% SC இடஒதுக்கீட்டை அவர்களின் சமூக, பொருளாதார, கல்வி பின்னடைவு அடிப்படையில் பாகுபடுத்தி, இதன் மூலம், அதிகம் பயன்பெறாத துணைச் சாதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

Group 1 பிரிவில், மிகவும் பின்தங்கிய 15 பிரிவினருக்கு 1% இடஒதுக்கீடும், Group 2 பிரிவில் 18 பிரிவினருக்கு 9% இடஒதுக்கீடும்,  Group 3 பிரிவில் 26 பிரிவினருக்கு 5% இடஒதுக்கீடும் அளிக்கப்பட்டு உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்