தெலுங்கானா போக்குவரத்து காவல்துறையின் திடிர் சலுகையால் அபாரதத் தொகை செலுத்த வேண்டிய இ-சலான் மூலம் இன்று ஒரு நாளில் ரூ.5.5 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது.
இரு மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கு நிலுவையில் உள்ள தொகையில் 75% ,இலகுரக மோட்டார் வாகனங்கள் மற்றும் கனரக மோட்டார் வாகனங்களுக்கு 50%,மற்றொரு சலுகையானது கோவிட் தொற்றுநோய்களின் போது முகமூடிகளை அணியாததால் பெறப்படும் இ-சலான்களுக்கு 90% தள்ளுபடி மற்றும் தள்ளு வண்டிகளுக்கு வழங்கப்படும் சலான்களுக்கு 80% தள்ளுபடி என்ற அதிரடி அறிவிப்பு வெளியானது.
இந்த அறிவிப்பால் திகைத்துப்போன அபராத் தொகை செலுத்த வேண்டியவர்கள் ஒவ்வொரு நிமிடத்திற்கும் 800 முதல் 1000 இ-சலான்களை செலுத்தி தெலுங்கானா போக்குவரத்து துறையை திகைப்பில் ஆழ்த்தியுள்ளனர்.
இதுபற்றி போக்குவரத்து ஆய்வாளர் (இ-சலான்) எம் நர்சிங் ராவ் கூறுகையில் “வாகன உரிமையாளர்களிடமிருந்து நிலுவையில் உள்ள இ-சலான்களை தள்ளுபடியில் வசூல் செய்ய திட்டமிட்டு இருந்தோம்.இதில் எங்கள் இலக்கானது சுமார் 2 லட்சம் சலான்ங்கள் செலுத்தப்படும் என்று கணித்திருந்தோம்,ஆனால் எங்கள் கணிப்பை மீறி சுமார் 4.5 லட்சம் சலான்ங்கள் செலுத்தப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சியையும் ஆச்சிரத்தையும் தந்துள்ளது என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
முதல் நாளான இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நிமிடத்திற்கு 1000 சலான்ங்கள் வரை செலுத்தப்பட்டதாக கூறினார்.இந்த மிகப்பெரிய ஆன்லைன் டிராபிக் காரணமாக இ-சலான் செலுத்தும் போது பயனர்கள் சில தொழிநுட்ப கோளாறுகளை எதிர்கொண்டனர்,ஆனால் அதிர்ஷ்டவசமாக முற்றிலுமாக செயலிழக்கவில்லை.
ஹைதராபாத் காவல்துறையின் இணை ஆணையர் (போக்குவரத்து) ஏ.வி.ரங்கநாத் கூறுகையில்,இன்று பெறப்பட்ட இ-சலான்களின் மதிப்பு சுமார் ரூ.20 கோடி இருக்கும்,ஆனால் தள்ளுபடி காரணமாக சுமார் ரூ.கோடி வரை வசூல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மும்பை : கடந்த வாரம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்தார். அமெரிக்கவில் இறக்குமதி ஆகும்…
திருச்சி : இன்று காலை முதலே தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவுக்கு தொடர்புடையவர்கள் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி…
சென்னை : தமிழக பட்ஜெட் 2025-2026 முடிந்து அதன் பிறகு பட்ஜெட் மீதான விவாதம், துறை வாரியாக மானிய கோரிக்கைகள்…
டெல்லி : எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளை மீறி, வக்ஃப் வாரிய திருத்த மசோதா, 2025 மீதான முன்னோடியில்லாத 17 மணி…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : சென்னையில் TVH கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். எம்.ஆர்.சி.நகர்,…