தெலுங்கானாவில் நடந்த வினோதம்.! எல்கேஜி சிறுமிக்கு வாக்காளர் அட்டைகொடுத்த அதிகாரிகள்.!
- பொதுவாக ஒரு ஆண் அல்லது பெண் வாக்காளர் அடையாள அட்டை பெற 18 வயது பூர்த்தி பெற்றிருக்க வேண்டும்.
- தெலுங்கானா மாநிலத்தில் எல்கேஜி படிக்கும் 3 வயதான நந்திதா என்ற சிறுமிக்கு தேர்தல் அதிகாரிகள் வாக்காளர் அடையாள அட்டை வழங்கியுள்ளனர்.
பொதுவாக ஒரு ஆண் அல்லது பெண் வாக்காளர் அடையாள அட்டை பெற 18 வயது பூர்த்தி பெற்றிருக்க வேண்டும். 18 வயது நிரம்பியவர்களுக்கு மட்டுமேதேர்தல் ஆணையம் வாக்காளர் அட்டையை வழங்கும்.அடையாள அட்டைபெற பிறப்பு சான்றிதழ் அல்லது ஆதார்கார்டு கொண்டு விண்ணப்பம் பூர்த்தி செய்து பின்னர் வாக்காளர் அடையாள அட்டை வாங்க முடியும்.
ஆனால் தெலுங்கானா மாநிலத்தில் இதற்கு தலைகீழாக ஒரு சம்பவம் நடந்துள்ளது. தெலுங்கானா மாநிலம் மாருதி நகர் பகுதியில் கரீம்நகரை சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகள் நந்திதா(3) இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் எல்கேஜி வருகிறார்.இந்நிலையில் நந்திதாவிற்கு தேர்தல் அதிகாரிகள் வாக்காளர் அடையாள அட்டை வழங்கியுள்ளனர்.
இதில் கொடுமை என்னவென்றால் அந்த வாக்காளர் அடையாள அட்டையில் சிறுமியின் புகைப்படத்துடன் அவரது வயது 35 என குறிப்பிடப்பட்டுள்ளது.இதுவரை வாக்காளர் அட்டையில் பெயர் மாற்றம் , பெயர்களில் திருத்தம் போன்ற நடத்து இருப்பதை பார்த்து இருப்போம்.
ஆனால் இது போன்ற சம்பவம் நடந்து இருப்பது இதுவே முதல் முறை. இதைத்தொடர்ந்து நந்திதாவின் தந்தை தேர்தல் அதிகாரியிடம் முறையிட்டு பின்னர் வாக்காளர் பட்டியலில் இருந்து நந்திதா பெயரை நீக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர் என கூறப்பட்டது.