தெலுங்கானா அமைச்சரின் எஸ்கார்ட் போலீஸ் தற்கொலை..!

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள ஜூப்ளி ஹில்ஸ் காவல் நிலைய எல்லையில் தெலுங்கானா கல்வி அமைச்சர் சபிதா இந்திரா ரெட்டியின் துணை போலீஸ் பாதுகாப்பு அதிகாரி அமீர்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள ஓட்டலில் தனது சர்வீஸ் துப்பாக்கியால் நெற்றியில் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து பேசிய மேற்கு மண்டல ஹைதராபாத் நகர போலீஸ் டிசிபி ஜோயல் டேவிஸ் கூறுகையில், அமைச்சர் சபிதா இந்திரா ரெட்டியின் துணை போலீஸ் பாதுகாப்பு அதிகாரி முகமது ஃபசல் அலி (60) என்பது தெரியாவந்துள்ளது. இந்த சம்பவம் இன்று காலை 7 மணியளவில் நடந்ததாக தெரிகிறது. முகமது ஃபசல் அலி தற்கொலை செய்து கொண்டதற்கு நிதி மற்றும் குடும்பப் பிரச்னை காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கிறோம்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். பிரேத பரிசோதனை இன்னும் செய்யப்படவில்லை. தடயவியல் குழு சம்பவ இடத்தில் உள்ளது என்று கூறினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs RCB : அதிரடி காட்டி படிதர் அடித்த அரைசதம்.., சிஎஸ்கே அணிக்கு இதுதான் டார்கெட்.!
March 28, 2025
மீண்டும் மின்னல் வேக ஸ்டம்பிங் செய்த தோனி.! மிரண்டு போன ஆர்சிபி வீரர்கள்! நடையை கட்டிய சால்ட்..
March 28, 2025