பிரதமர் மோடியுடன் தெலுங்கானா ஆளுநர் சந்திப்பு..!
பிரதமர் மோடியுடன் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சந்தித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது, தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கான பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
தெலுங்கானா மற்றும் புதுச்சேரி வளர்ச்சிக்கு மத்திய அரசு உறுதுணையாக செயல்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, பிரதமர் மோடியுடன் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சந்தித்துள்ளார்.