தெலுங்கானா அமைச்சரவைக் கூட்டம் :
தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் மார்ச் 14ம் தேதி இன்று மாலை 6 மணிக்கு அமைச்சரவைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தேவையான தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மூத்த அதிகாரிகள் மற்றும் சுகாதார அமைச்சரின் ஆலோசனைகள் மற்றும் முடிவுகள் எடுக்க கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .
திரு கே.சந்திரசேகர் ராவ் இன்று சட்டமன்றத்தில் பேசும் பொழுது கொரோனா வைரஸ் குறித்து பேசினார். அப்பொழுது அவர் கூறும்பொழுது ,தெலுங்கானாவில் நிலைமை ஆபத்தான நிலையில் இல்லை என்றும் எந்தவொரு தீவிரமான சூழ்நிலையையும் எதிர்கொள்ள அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
கொரோனா பாதிப்பு 2 ஆக உயர்வு :
தெலுங்கனாவில் கொரோனோவால் மேலும் ஒருவருக்கு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் அணுகு எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது. இது பற்றி திரு கே.சந்திரசேகர் ராவ் கூறுகையில், இத்தாலியில் இருந்து வந்த ஒரு நபருக்கு கொரோனோ வைரஸ் இருப்பது உறுதிசெய்யப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் 2 நபருக்கு கொரோனோ இருப்பதாக சந்தேகிக்கப்பட்டு புனேவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அதன் முடிவுகளுக்கு காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.
கொரோனா முன்னெச்சரிக்கை :
இந்நிலையில், திரையரங்குகள், மால், அனைத்து பள்ளிகள் உள்ளிட்ட கொரோனா அச்சம் காரணமாக இன்று இரவு முதல் மார்ச் 31ம் தேதி வரை மூடுவதாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதுபோன்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைககள் நாட்டில் சில மாநிலங்கள் ஆரம்பித்துள்ளதைக் குறிப்பிட்டுள்ள தெலுங்கானா முதலமைச்சர், அதன் நடவடிக்கைகளை இறுதி செய்ய இன்று சனிக்கிழமை அமைச்சரவைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான…
சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு மாணவி 2 பேரால்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. சென்னையில்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களுக்கு நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்வு சென்னையில்…
மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…