தெலுங்கானாவில் மாஸ்க் அணியாவிட்டால் 1000 ரூபாய் அபராதம்!
கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகமே பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தெலுங்கானாவில் மாஸ்க் அணியாதவர்களிடம் 1000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என தெலுங்கானா தெலுங்கானா முதல்மந்திரி சந்திர சேகர ராவ் அறிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இதுவரை 48 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், இந்த வைரஸின் தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்க்காக அனைவரும் முக கவசங்கள் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து தெலுங்கானாவில் கொரோனவால் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர், நேற்று ஒரே நாளில் 140 க்கும் அதிமானோர் புதிதாக பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இதுவரை அங்கு 34 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், தெலுங்கானா முதல்மந்திரி சந்திர சேகரராவ் இது குறித்து பேசியபோது, வீட்டை விட்டு வெளியில் வருபவர்கள் கட்டாயம் முக கவசம் அணிந்திருக்க வேண்டும் எனவும், அவ்வாறு அணியாமல் வெளியில் வருபவர்களிடம் 1000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் எனவும் கூறியுள்ளார். மேலும், மக்கள் அனாவசியமாக சாலைகளில் சுற்றி திரிந்தால் முழு ஊரடங்கை அமல்படுத்த நேரிடும் எனவும் எச்சரித்துள்ளார்.