ஊரடங்கை மே 7-ம் தேதி வரை நீட்டித்த தெலுங்கானா.!
தெலுங்கானா மாநிலத்தில், மே 7-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டிப்பதாக முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில், இன்று காலை வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17265 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து 543 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மஹாராஷ்டிராவில் 4203 பேரும், டெல்லியில் 2003 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் உள்ளன.
கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசு, முதற்கட்டமாக ஊரடங்கை 21 நாட்கள் அமல்படுத்திய நிலையில் மீண்டும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. இதையெடுத்து ஏப்ரல் 20-ம் தேதிக்கு பிறகு (அதாவது இன்று ) ஊரடங்கில் சில தளர்வுகள் செய்யப்படும் என மத்திய அரசு கூறியது.
அதன்படி ,விவசாயம், மீன்பிடித்தல் உள்ளிட்ட தொழில்களுக்கு அனுமதி கொடுத்துள்ளது.இந்நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் மே 7-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டிப்பதாகவும், அதுவரை எந்த தளர்வுக்கும் இருக்காது என முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார்.