Telangana CM Chandrasekara Rao [Image source : ANI]
தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தல் 119 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் நவம்பர் 30ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை அடுத்து தெலுங்கானா, சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மிசோராம் என ஐந்து மாநில தேர்தலுக்கான முடிவுகள் டிசம்பர் 3ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.
நவம்பர் 30ஆம் தேதி நடைபெற உள்ள தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்யும் பணிகள் துவங்கிவிட்டன. தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ், கஜ்வெல் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தார். இதனை தொடர்ந்து இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
சந்திர சேகர ராவின் சொந்த மாவட்டத்தை சேர்ந்த கஜ்வெல் தொகுதியில் போட்டியிடுவதை போலவே , கமரெட்டி தொகுதியிலும் சந்திரசேகர ராவ் போட்டியிட உள்ளார். இதில் கமரெட்டி தொகுதியில் தான் கடந்த முறை சந்திரசேகர் ராவ் வெற்றி பெற்று இருந்தார்.
ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலுங்கானா மாநிலம் தனியாக பிரிந்து வருவதற்கு முக்கிய காரணமாக விளங்கியவர் சந்திரசேகர ராவ் என்பதால் கடந்த 2014 மற்றும் 2018 என இரு முறையும் ஆட்சியை கைப்பற்றி முதல்வராக தொடர்ந்து வருகிறார். தற்போது 3வது முறையாக வெற்றி பெற்று ஹாட்ரிக் ஆட்சி அமைக்க கேசிஆர் தீவிர தேர்தல் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்.
டெல்லி : இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1984 ஆம் ஆண்டு, அக்டோபர் 31 அன்று தனது சீக்கிய…
ராவல்பிண்டி : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபியின் 7-வது போட்டி இன்று ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவிருந்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா…
துபாய் : கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணியும், இந்திய கிரிக்கெட் அணியும் மோதியது.…
சேலம் : பாமக கௌரவ தலைவரும், பாமக சட்டமன்ற குழுத் தலைவருமான ஜி.கே.மணியின் இல்ல திருமண விழா நாளை காலை…
சென்னை : நாதகவில் இருந்து சமீபத்தில் பல முக்கிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது குற்றச்சாட்டுகளை…
சென்னை : தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, …