தெலுங்கானா தேர்தல் 2023 : முதல்வர் சந்திரசேகர ராவ் வேட்புமனு தாக்கல்.!

Telangana CM Chandrasekara Rao

தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தல் 119 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக  வரும் நவம்பர் 30ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை அடுத்து தெலுங்கானா, சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மிசோராம் என ஐந்து மாநில தேர்தலுக்கான முடிவுகள் டிசம்பர் 3ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

நவம்பர் 30ஆம் தேதி நடைபெற உள்ள தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்யும் பணிகள் துவங்கிவிட்டன.  தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ், கஜ்வெல் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தார். இதனை தொடர்ந்து இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

சந்திர சேகர ராவின் சொந்த மாவட்டத்தை சேர்ந்த கஜ்வெல் தொகுதியில் போட்டியிடுவதை போலவே , கமரெட்டி தொகுதியிலும் சந்திரசேகர ராவ் போட்டியிட உள்ளார். இதில் கமரெட்டி தொகுதியில் தான் கடந்த முறை சந்திரசேகர் ராவ் வெற்றி பெற்று இருந்தார்.

ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலுங்கானா மாநிலம் தனியாக பிரிந்து வருவதற்கு முக்கிய காரணமாக விளங்கியவர் சந்திரசேகர ராவ் என்பதால் கடந்த 2014 மற்றும் 2018 என இரு முறையும் ஆட்சியை கைப்பற்றி முதல்வராக தொடர்ந்து வருகிறார். தற்போது 3வது முறையாக வெற்றி பெற்று ஹாட்ரிக் ஆட்சி அமைக்க கேசிஆர் தீவிர தேர்தல் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்