கடந்த மாதம் 5 மாநில தேர்தல் நிறைவடைந்து நேற்று 4 மாநில சட்டப்பேரவை முடிவுகள் நேற்று வெளியாகின . அதில், காங்கிரஸ் ஏற்கனவே ஆட்சி செய்து வந்த ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களிலும், மத்திய பிரதேசத்திலும் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்துள்ளது. தெலுங்கானாவில் மட்டும் ஆட்சியை முதன் முறையாக காங்கிரஸ் கைப்பற்றி உள்ளது .
தெலுங்கானாவில் மொத்தமுள்ள 119 தொகுதிகளில் பெரும்பாண்மைக்குக் 60 தொகுதிகள் தேவை, காங்கிரஸ் கட்சியானது 64 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும்பான்மை பெற்றது. கடந்த முறை 101 தொகுதிகளை வென்று இருந்த முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் பாரதிய ராஷ்டிரிய சமிதி இந்த முறை 39 தொகுதிகளை மட்டுமே வென்று இருந்தது. பாஜக 8 தொகுதிகளையும், ஏஐஎம்ஐஎம் (AIMIM) 7 இடங்களிலும், சிபிஐ 1 இடத்திலும் வெற்றி பெற்றன.
தெலுங்கானாவில் முதல்வர்களை தோற்கடித்த பாஜக வேட்பாளர்..!
தெலுங்கானா மாநிலம் தனியாக பிரிந்ததில் இருந்து கடந்த 10 ஆண்டுகளாக சந்திரசேகர ராவ் தான் முதல்வராக பொறுப்பில் இருந்தார். இந்த முறை சந்திரசேகர ராவின் பிஆர்எஸ் கட்சியை காங்கிரஸ் தோற்கடித்து முதன் முறையாக ஆட்சியை கைப்பற்றியது. அம்மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி முதன் முதலாக மாநில முதல்வராக பொறுப்பேற்க உள்ளார்.
நேற்று தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனிடம் சந்திர சேகர ராவ் தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். அதனை தொடர்ந்து, காங்கிரஸ் மாநில தலைவர் ரேவந்த் ரெட்டி ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே,சிவக்குமார் உடன் இருந்தார்.
இந்த தேர்தலில் முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் மற்றும் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவரும், வருங்கால முதல்வருமான ரேவந்த் ரெட்டி போல தெலுங்கானா அரசியலில் பேசப்படும் நபராக மாறியுள்ளார் கமாரெட்டி தொகுதி பாஜக எம்எல்ஏ கே.வி.ராமணா ரெட்டி. ஏனென்றால் கமாரெட்டி தொகுதியில் அவர் வென்றது இரு தலைவர்களை. ஒன்று கே சந்திரசேகர ராவ், இன்னொன்று ரேவந்த் ரெட்டி. இருவருமே இந்த தொகுதியில் பாஜக வேட்பாளர் கே.வி.ரமணா ரெட்டியிடம் தோல்வி கண்டனர்.
மேலும் கடந்த முறை 2018 சட்டமன்ற தேர்தலில் மொத்தமாக 7 சதவீத வாக்கு சதவீதம் பெற்று ஒரு இடத்தை மட்டுமே வென்றிருந்த நிலையில் இந்த தேர்தலில் பாஜக வாக்கு சதவீதமானது 13.88 சதவீதமாக அதிகரித்து 8 தொகுதிகளை பாஜக கைப்பற்றி தெலுங்கானாவில் முன்னேற்றம் கண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தெலுங்கர்கள் அந்தப்புரத்து சேவகர்கள் என்ற நடிகை கஸ்தூரியின் சர்ச்சைப் பேச்சு தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.…
நாகப்பட்டினம் : நாகை மற்றும் திருமருகல் ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு நாளை (நவ.06] உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்கல் சிங்காரவேலர்…
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் அரசு மற்றும் கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று வருகை தந்த போது, துணை…
சென்னை : தெலுங்கு பேசும் மக்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்கு நடிகை கஸ்தூரி பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார். தெலுங்கர்கள் அந்தப்புரத்து…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இம்மாதம் 25-ஆம் தேதி தொடங்கும் என்று நாடாளுமன்ற விவாகாரங்கள் துறை அமைச்சர் கிரண்…
அமெரிக்கா : உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு இந்திய நேரப்படி சரியாக மாலை…