தெலுங்கானா தேர்தல்: இலவச மடிக்கணினி, 4 சிலிண்டர்கள், 4% இடஒதுக்கீடு ரத்து – பாஜக அறிவித்த வாக்குறுதி..!

தெலுங்கானாவில் உள்ள 119 சட்டசபைகளுக்கான தேர்தல் நவம்பர் 30-ம் தேதி நடக்கிறது. தேர்தல் முடிவுகள் டிசம்பர் 3-ம் தேதி வெளியாக உள்ளது. தெலுங்கானா தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் ஏற்கனவே வெளியிட்டுள்ளது. இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய அமைச்சரும் தெலுங்கானா பாஜக தலைவருமான ஜி. கிஷன் ரெட்டி மற்றும் பிரகாஷ் ஜவடேகர் ஆகியோருடன் தெலுங்கானா சட்டமன்றத் தேர்தலுக்கான  வாக்குறுதியை ஹைதராபாத்தில் நேற்று வெளிட்டுப்பட்டது.

1. மாநிலத்தில் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட 4 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்வதாக பாஜக வாக்குறுதி அளித்தது. முஸ்லிம்களுக்கு மத ரீதியாக இடஒதுக்கீடு அளிக்கப்படும் ஒரே மாநிலம் தெலுங்கானா என்று அமித்ஷா கூறினார். மதத்தின் அடிப்படையிலான இடஒதுக்கீடு அரசியலமைப்புக்கு எதிரானது. முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட 4 சதவீத இடஒதுக்கீட்டை நாங்கள் ரத்து செய்வோம், அதற்குப் பதிலாக பிற்படுத்தப்பட்டோர், எஸ்சி மற்றும் எஸ்டிகளுக்கான இடஒதுக்கீட்டை உயர்த்துவோம் என தெரிவித்தார்.

2. உஜ்வாலா யோஜனா திட்டத்தின் பயனாளிகளுக்கு ஆண்டுக்கு நான்கு கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும்.

3. தெலங்கானாவில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைத்ததும், 6 மாதங்களுக்குள் மாநிலத்தில் ஒரே மாதிரியான குடிமைச் சட்டத்தை கொண்டு வரப்படும்.

4. பெண் குழந்தை பிறந்தால் ரூ. 2 லட்சம் மதிப்பிலான நிரந்தர வைப்புத் தொகை வழங்கப்படும் .மேலும், மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு 1 சதவீத வட்டியில் மட்டுமே கடன் வழங்கப்படும்.

5. மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்ததும் ஹைதராபாத் விடுதலை தினம் (செப்டம்பர் 17 அன்று) அரசாங்கத்தால் அதிகாரப்பூர்வமாக கொண்டாடப்படும்.

6. மதிப்புக்கூட்டு வரியை (வாட்) குறைத்து பெட்ரோல், டீசல் விலையை குறைக்கப்போவதாக தெரிவித்தது.

7. நடுத்தர மற்றும் சிறு விவசாயிகளை ஆதரிக்கும் முயற்சியில், அவர்களுக்கு ஏக்கருக்கு ரூ. 2500 நிதியுதவி அளிக்கப்படும். மேலும், “பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா திட்டத்தின் கீழ், பாஜக ஆட்சியில் விவசாயிகளுக்கு இலவச காப்பீடு வழங்கப்படும்.

8.மேலும், அரிசி மற்றும் நெல் குவிண்டில் ஒன்றுக்கு ரூ. 3100 என்ற விலையில் கொள்முதல் செய்யப்படும் என  உறுதியளித்தது.

9. பட்டம் அல்லது தொழில்முறை படிப்புகளைத் தொடர்பவர்களுக்கு இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும். மாநிலத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் 2.5 இளைஞர்களுக்கு வேலை வழங்கப்படும்.

10. கிருஷ்ணா நதிநீர் தகராறு தீர்ப்பாயத்தின் உதவியுடன் மாநிலத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சனையை தீர்ப்பதாக பாஜகவும் உறுதியளித்தது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்