தெலங்கானா டிஜிபி இடைநீக்கத்தை ரத்து செய்த தேர்தல் ஆணையம்!
5 மாநில சட்டப்பேரவை தேர்தல் நடந்து நிலையில், தெலுங்கானாவில் மட்டும் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியது. கடந்த 10 வருடங்களாக ஆட்சி செய்து வந்த முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் பி.ஆர்.எஸ் கட்சியை தோற்கடித்து, காங்கிரஸ் முதன் முறையாக தெலுங்கானாவில் ஆட்சியை கைப்பற்றியது.
தெலுங்கானாவில் மொத்தமுள்ள 119 தொகுதிகளில் 64 தொகுதிகளை கைப்பற்றி தனி பெரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சியை பிடித்துள்ளது. இந்த நிலையில், கடந்த 7-ஆம் தேதி தெலுங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி முதலமைச்சராக பதவியேற்றார்.
கேரள முதல்வர் உடல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்த சதி – கேரள கவர்னர் குற்றசாட்டு
ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், பதவி பிரமாணம் செய்து வைத்த நிலையில், தெலுங்கானா மாநிலத்தின் புதிய முதல்வராக ரேவந்த் ரெட்டியும், துணை முதல்வராக பாட்டி விக்ரமார்காவும் பதவியேற்று கொண்டனர்.
இந்த நிலையில், தேரதல் நடைபெறும் போதே ரேவந்த் ரெட்டியை நேரில் சந்தித்து தெலங்கானா டிஜிபி அஞ்சனி குமார் பூங்கொத்து கொடுத்தார். தேரதல் நடைபெறும் போதே ரேவந்த் ரெட்டியை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்ததன் மூலம், தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக டிஜிபி அஞ்சனி குமாரை தேர்தல் ஆணையம் இடைநீக்கம் செய்திருந்தது. இந்த நிலையில், தெலுங்கானா டிஜிபி அஞ்சனி குமாரின் இடைநீக்கத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது.