ஊரடங்கை கண்டிப்பாக நீட்டிக்க வேண்டும்- பிரதமர் மோடிக்கு தெலுங்கானா முதலமைச்சர் கோரிக்கை
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக முழுவதும் பரவி நாளுக்கு நாள் பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தியாவில் கொரோனாவால் 5000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். எனவே கொரோனாவை தடுக்கும் நோக்கில் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதற்குஇடையில் தான் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என்று செய்திகள் அதிகம் வலம் வந்தது. இந்நிலையில் தான் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை விடுத்து உள்ளார்.ஏப்ரல் 15-ஆம் தேதிக்கு பிறகும் நீட்டிக்க ஆதரவு தெரிவிக்கிறேன் என்று கூறியுள்ளார்.