மதுபான கொள்கை முறைகேடு வழக்கின் விசாரணைக்காக டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார் கவிதா.
மதுபான கொள்கை முறைகேடு:
டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அம்மாநில துணை முதலமைச்சராக இருந்த மணிஷ் சிசோதியா ஏற்கனவே சிபிஐயால் கைது செய்யப்பட்டு, தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். புதிய மதுபான கொள்கையில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாக கூறி டெல்லி அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
கவிதாவுக்கும் தொடர்பு:
இதே ஊழல் வழக்கில், தெலங்கானா முதல்வரும் பாரத் ராஷ்ட்ர சமிதியின் தலைவருமான கே.சந்திரசேகர ராவின் மகள் கவிதாவுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, அவரிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை முடிவு செய்தது. அதன்படி, கடந்த ஆண்டு டிசம்பர் 12 அன்று ஹைதராபாத்தில் தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகளான கே.கவிதாவிடம் சிபிஐ அதிகாரிகள் ஏழு மணி நேரத்திற்கும் மேல் விசாரணை நடத்தியிருந்தனர்.
அமலாக்கத்துறை சம்மன்:
இதையடுத்து, பாரதிய ராஷ்டிரிய சமிதி (பிஆர்எஸ்) எம்எல்சி கவிதா, டெல்லி அமலாக்க இயக்குனரகம் தலைமையகத்தில் உள்ள புலனாய்வாளர்கள் முன் ஆஜராகி தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்ய வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டது. 9ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு கடந்த 8ம் தேதி சம்மன் அனுப்பப்பட்டது. இதன்பின், தன்னை தனது வீட்டில் வைத்து விசாரணை நடத்துமாறு கவிதா கோரிக்கை வைத்த நிலையில், இதை ஏற்க மறுத்த அமலாக்கத்துறை, டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு தெரிவித்தது.
அமலாக்கத்துறையில் ஆஜர்:
மதுபான கொள்கை வாழைக்கு தொடர்பான விசாரணைக்கு இன்று நேரில் ஆஜராவதாக கவிதா தெரிவித்திருந்தார். இந்த நிலையில், விசாரணைக்காக டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார் கவிதா. டெல்லி அரசின் மதுவிலக்கு கொள்கை முறைகேடு புகார் தொடர்பாக தெலுங்கானா முதல்வர் மகள் கவிதாவிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஹைதராபாத்தில் போஸ்டர்:
இதனிடையே, டெல்லி மதுக்கொள்கை வழக்கில் கே.கவிதா அமலாக்க இயக்குனரகம் முன்பு ஆஜராகவுள்ள நிலையில், ஹைதராபாத்தில் பாஜகவில் இணைந்த பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் மற்றும் இப்போது அவர்கள் எந்த ஏஜென்சி ரெய்டுகளையும் எதிர்கொள்ளவில்லை எனக் சுட்டி காட்டும் வகையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. மற்ற கட்சிகளில் இருந்து பாஜகவில் இணைந்த தலைவர்கள் மற்றும் பிஆர்எஸ் எம்எல்சி கே.கவிதா ஆகியோர் இடம்பெற்றுள்ள போஸ்டர்கள் ஹைதராபாத்தில் ஓட்டப்பட்டிருப்பது பரப்பரப்பான சூழலை உருவாகியுள்ளது.
நியூயார்க்: அமெரிக்காவில் நடைபெற்ற உலக பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில், நார்வேயின் கார்ல்சன் மற்றும் ரஷ்யாவின் இயன் நெபோம்னியாச்சி ஆகிய…
சென்னை: பிரபல கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், புற்றுநோய்க்காக அமெரிக்காவில் உள்ள மியாமி மருத்துவமனையில் அண்மையில் அறுவை சிகிச்சை செய்து…
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 500 அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகள், தனியார் பங்களிப்புடன் நிறைவேற்றப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ்…
நியூ ஆர்லியன்ஸ்: அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் நகரில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக கூடியிருந்த மக்கள் மீது, அதிவேகமாக வந்த கார் புகுந்து…
சென்னை: நடிப்பதை தாண்டி நடிகர் தனுஷ் இயக்குனராகவும் தடம் பதித்து வருகிறார். பா.பாண்டி, ராயன் படங்களை தொடர்ந்து, நிலவுக்கு என்…
துபாய்: விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் அடிக்கடி வெளிநாடு பயணங்கள் மேற்கொள்வதில் ஆர்வம் கொண்டவர்கள். மேலும் அவர்களது விடுமுறை…