டெல்லி மதுபான கொள்கை வழக்கு : மீண்டும் விசாரணைக்கு ஆஜரானார் தெலுங்கானா முதல்வர் மகள்.!
டெல்லி மதுபான கொள்கை வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை அலுவலகத்தில் மீண்டும் விசாரணைக்கு ஆஜரானார் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மகள் கவிதா.
டெல்லியில் புதியதாக அமல்படுத்தப்பட்ட மதுபான கொள்கையில் முறைகேடு நடந்ததாகவும், அதனால் அரசுக்கு பலகோடி ரூபாய் அளவீட்டில் இழப்பீடு ஏற்பட்டதாகவும், இதில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாகவும், கூறி சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
சிசோடியா கைது :
ஏற்கனவே டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட சிலர் கைதாகியுள்ளனர். இந்த சட்டவிரோத பணப்பரிவர்த்தனை விவகாரம் தொடர்பாக தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மகள் கவிதாவும் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது.
கவிதா ஆஜர் :
ஏற்கனவே, டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் 11ஆம் தேதி ஆஜராகிய அவரிடம் 8 மணிநேரம் விசாரணை நடைபெற்றது. அது திருப்தி அளிக்கவில்லை என கூறி மீண்டும் 16ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது.
மீண்டும் ஆஜர் :
கடந்த 16ஆம் தேதி கவிதா ஆஜராகாத காரணத்தால் மீண்டும் இன்று ஆஜராகி சம்மன் அனுப்பப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று அவர் டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி உள்ளார் . அவரிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.