கொரோனா தொற்று குறைந்துள்ளதால் ஊரடங்கை முழுமையாக வாபஸ் பெற தெலுங்கானா அமைச்சரவை முடிவு!
தெலுங்கானாவில் தற்பொழுது கொரோனாவின் தாக்கம் குறைந்துள்ளதால் ஊரடங்கை முழுவதுமாக வாபஸ் பெற அம்மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே நாட்டிலுள்ள பல மாநிலங்களிலும் கடுமையான கட்டுப்பாடுகளுடனான ஊரடங்கு விதிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை முடிவடைந்துள்ள நிலையில் பல மாநிலங்களில் கொரோனாவின் தாக்கம் குறைய தொடங்கியுள்ளது. எனவே ஒவ்வொரு மாநிலங்களிலும் ஆங்காங்கு உள்ள நிலைமைக்கேற்ப ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்திலும் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்பொழுது கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் கட்டுக்குள் வந்துள்ளதால் தெலுங்கானா மாநிலத்தில் விதிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கை முழுவதுமாக வாபஸ் பெற அம்மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இதன்படி நாளை காலை 6 மணி முதல் தெலுங்கானா மாநிலத்தில் ஊரடங்கு முழுவதுமாக வாபஸ் பெறப்படுகிறது என தகவல் வெளியாகியுள்ளது.