தெலங்கானா சட்டப்பேரவை தேர்தல்.. வாக்குப் பதிவு நிலவரம்!

Telangana assembly elections

சத்தீஸ்கர், மிசோரம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய நான்கு மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தலின் வாக்குப்பதிவு கடந்த சில நாட்களாக நடந்து முடிந்த நிலையில், இன்று தெலுங்கானாவில் உள்ள 119 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில், தெலுங்கானாவில் 106 தொகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரையிலும், பதட்டமான தொகுதிகள் என கணக்கிடப்பட்ட 13 தொகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

மொத்தமுள்ள 3.66 கோடி வாக்காளர்கள் உள்ள தெலுங்கானாவில், மொத்தம் 35,655 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 7571 வாக்குச்சாவடிகள் பதட்டமான வாக்குசாவடிகளாக காணப்படுவதால், அங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் ஆளும் பிஆர்எஸ், பாஜக, ஜனசேனா கூட்டணி காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் போட்டியிடுகின்றன.

தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தல் : வரிசையில் நின்று வாக்களித்த ராஜமௌலி, அல்லு அர்ஜுன், சிரஞ்சீவி.!

அதன்படி, தெலுங்கானாவில் மொத்தம் 2,290 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 3.26 கோடி வாக்காளர்கள் வாக்களிகின்றனர். 7571 வாக்குச்சாவடிகள் பதட்டமான வாக்குசாவடிகளாக இருப்பதால், கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த சூழலில், இன்று காலை முதல் வாக்குப்பதிவு மும்மரமாக நடைபெற்று வரும் நிலையில், பொதுமக்கள், அரசியல் கட்சியினர், சினிமா பிரபலங்கள் என பலரும் வரிசையில் நின்று தங்கள்து ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.

இந்த நிலையில், தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 20.64 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின்படி, அடிலாபாத்தில் 30.65 சதவீதமும், பத்ராத்ரியில் 22.05 சதவீதமும், ஹனுமன்கொண்டாவில் 21.43 சதவீதமும், ஜக்தியாலில் 22.50 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.

மேலும், காமரெட்டியில் 24.70 சதவீத வாக்குகளும், கம்மத்தில் 26.03 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன. மஹபூபாபாத்தில் 28.05 சதவீதமும், மேடக்கில் 30. 27 சதவீதமும், முலுகுவில் 25.36 சதவீதமும், சித்திபேட்டில் 28.08 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன. மும்முனை போட்டி நிலவும் தெலுங்கனாவில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இருப்பினும், ஆளும் பிஆர்எஸ் கட்சிக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த மாநில தேர்தலின் முடிவுகள் டிசம்பர் 3ம் தேதி வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்