தெலுங்கானா சட்டசபை தேர்தல்..! வேட்பாளர்களின் முதல் பட்டியல் அறிவித்தார் முதல்வர் கே.சந்திரசேகர் ராவ்.!
தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிடும் ஆளும் பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) கட்சியின் வேட்பாளர்களின் முதல் பட்டியலை, பிஆர்எஸ் தலைவரும், தெலுங்கானா முதல்வருமான கே.சந்திரசேகர் ராவ் அறிவித்துள்ளார்.
தெலுங்கானா மாநிலத்தில் மொத்தமாக 119 தொகுதிகள் உள்ளன. அதில் 7 தொகுதிகளில் மட்டுமே வேட்பாளர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதில் தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் கஜ்வெல் மற்றும் காமரெட்டி ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். இவர் மாநில முதல்வராக 2-வது முறை பதவிவகித்து வருகிறார்.