தெலுங்கானா விபத்து : லாரி மீது மோதிய கார்… 2 பேர் பலி!
வேகமாக வந்த கார் லாரி மீது மோதியதில் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா : மாநிலம் ஹைதராபாத் – வாரங்கல் நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை அதிகாலை நடந்த ஒரு துயரமான சாலை விபத்து சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்தனர் மற்றும் ஐந்து பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் அதிகாலையில் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியது.
போங்கிர் பைபாஸ் சாலை அருகே ஹைதராபாத்திற்கு திரும்பிக் கொண்டிருந்த கார் ஒன்று எதிர்பாராத விதமாக லாரி மீது மோதியதில் இந்த விபத்து சம்பவம் நிகழ்ந்தது என அதிகாரிகள் தகவலை தெரிவித்தனர். இந்த விபத்தில், உயிரிழந்தது ஒரு பெண் மற்றும் ஒரு இளம் பெண் அவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் எனவும், இறந்தவர்கள் மஹபூபாபாத்தில் உள்ள கீசமுத்திரம் மண்டலத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் தகவல்கள் வெளிவந்து இருக்கிறது.
மேலும், காரில் பயணித்த ஐந்து பேர் காயமடைந்தனர். வாரங்கல் மாவட்டத்தில் உள்ள கேசமுத்திரத்தில் சங்கராந்தியைக் கொண்டாடிவிட்டு அவர்கள் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த துயரமான சம்பவம் நடந்துள்ளது. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக போங்கிர் பகுதி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோ காட்சியில் கார் அப்பளம் போல காரில் மோதி நிற்கும் காட்சியை நம்மாள் பார்க்க முடிகிறது. மேலும், விபத்துக்கான காரணம் பற்றிய தெளிவான தகவல் இன்னும் வெளியாகவில்லை என்பதால் இது குறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
A woman and her daughter died in an accident in Telangana’s Bhongir.
The accident occurred on the Hyderabad-Warangal highway, when a truck rammed the car from behind. @TheSiasatDaily #Bhongir #accident #Telangana pic.twitter.com/lI403zuWeJ
— Mohammed Baleegh (@MohammedBaleeg2) January 16, 2025