பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிந்தது.நாளை பீகாரில் 2-ம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது.
பீகாரில் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம் பா.ஜனதா கூட்டணி ஆட்சி முடிவடையும் சூழலில் அம்மாநில சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.
அதன்படி முதல் கட்ட தேர்தல் அக்., 28ந் தேதி நடந்து முடிந்தது. 2ம் கட்ட தேர்தல், நாளை நடைபெற உள்ளது.2ம்கட்ட தேர்தலுக்காக கடந்த சில நாட்களாகவே சூறாவளி பிரசாரத்தினை கட்சிகள் நடத்தி வந்த நிலையில் நேற்று மாலையுடன் பிரச்சாரங்கள் முடிவடைந்தது.
இந்நிலையில் 2ம்கட்ட தேர்தல் 17 மாவட்டங்களை உள்ளடக்கிய 94 சட்டசபை தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடக்கிறது.வாக்குபதிவு காலை 7 மணிக்கு தொடங்குகிறது.குறிப்பிடப்பட்ட இந்த தொகுதிகளில் 2 கோடியே 85 லட்சத்து 50 ஆயிரத்து 285 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஆண்கள் 1 கோடியே 50 லட்சத்து 33 ஆயிரத்து 34 பேர்களும் பெண்கள் 1 கோடியே 35 லட்சத்து 16 ஆயிரத்து 271 பேர்களும் அதில் திருநங்கையர் 980 பேரும் உள்ளனர்.2ம்கட்ட தேர்தலுக்காக 41 ஆயிரத்து 362 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 1,463 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 1,316 பேர் ஆண்வேட்பாளர்கள் மற்றும் 146 பேர் பெண் வேட்பாளர்கள் ஆவர்.
மகராஜ்கஞ்ச் தொகுதியில் அதிகபட்சமாக 27 வேட்பாளர்களும்,தராலி
தனி தொகுதியில் குறைந்தபட்சமாக 4 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.
சென்னை: தமிழகத்தில் கனிம வளங்கள் அடிப்படை யில், நில வரி விதிப்பதற்கு, குவாரி உரிமையா ளர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது.…
கோவை : தமிழ்நாடு அரசியலில் எதிரும் புதிருமாக இருந்து வரும் தவெக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளும் இன்றைய…
மும்பை : லக்னோ மற்றும் மும்பை அணிகள் மாலை 3:30 மணிக்கும், டெல்லி மற்றும் பெங்களூரு அணிகள் இரவு 7:30…
கோவை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவையில் உள்ள குரும்பபாளையத்தில் தனியார் கல்லூரி வளாகத்தில் ஏப்ரல்…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி தனது 121-வது மன் கி பாத் (Mann Ki Baat) உரையில், மியான்மரில்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியவர்கள், குற்றவாளிகள் கடுமையான பதிலடியை எதிர்கொள்வார்கள் என பிரதமர் மோடி கூறியுள்ளார். பஹல்காமில்…