பறக்கும் நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு ! உயிர் தப்பிய அமைச்சர் நிதின் கட்காரி!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூரியில் இருந்து இண்டிகோ நிறுவனத்திற்கு சொந்தமான 6E 636 என்ற விமானம் டெல்லியை நோக்கி செல்ல இருந்தது.இந்த விமானத்தில் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி உட்பட ஏராளமான பயணிகள் டெல்லியை நோக்கி செல்ல இருந்தனர்.
அப்போது விமானம் ரன்வேக்கு சென்றது.பறப்பதற்கு தயாராக இருந்த போது விமானத்தில் இருந்த தொழில்நுட்ப கோளாறை விமானி கண்டுஅறிந்தார்.இது தொடர்பாக உடனடியாக அந்த விமானி விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.
பின்னர் அந்த விமானி ரன்வேயில் இருந்து விமானம் நிறுத்தும் இடத்திற்கு விமானத்தை கொண்டு வந்தார்.இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.விமானி சரியான நேரத்தில் தொழில்நுட்ப கோளாறை கண்டுபிடித்ததால் பெரும் விபத்தை தவிர்க்கப்பட்டது.
விமானத்தில் இருந்து அமைச்சர் நிதின் கட்கரி உட்பட அனைத்து பயணிகளுக்கும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.